முட்டைக்கோழிகள் மேலாண்மை
முட்டைக்கோழிகள் மேலாண்மையில் கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்வது நல்லது.
-
முட்டைக் கோழிக் கொட்டகையினை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தல்
-
கோழிகளுக்கேற்ற இடவசதி, தீவன வசதி மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை ஆழ்கூள மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் அளித்தல்
-
ஆழ்கூளக் கொட்டகையில் ஒரு கோழிக்கு 2 சதுர அடி இடவசதியும், தீவன இட அளவு 5 அடி அளிக்க வேண்டும்.
-
கூண்டு முறை வளர்ப்பில் நான்கு கோழிகளுக்கு 18" x 15"அளவு கூண்டு இருக்க வேண்டும் (ஒரு கோழிக்கு 0.46 சதுர அடி)
-
ஒவ்வொரு 30 முட்டைக் கோழிகளுக்கும் ஆறு அடி நீண்ட தீவனத்தட்டும், 18 இஞ்ச் வட்ட வடிவ தீவனத்தட்டு ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் 4-5 எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
18 இஞ்ச் அகலமுடைய பிளாஸ்டிக் தண்ணீர்த் தட்டுகளை ஒவ்வொரு 100 கோழிகளுக்கும் இரண்டு என்ற வீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கொட்டகைகளில் 6 இஞ்ச் உயரத்திற்கு ஆழ்கூளத்தைப் பரப்ப வேண்டும்.
-
கோழிகளின் முதுகு உயரத்திற்கு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளைத் தொங்க விட வேண்டும்.
-
தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர்த் தட்டுகளில் உள்ள கம்பிகளைக் கோழிகளின் உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும்.
-
ஒவ்வொரு 5 முட்டைக்கோழிகளுக்கு ஒரு முட்டையிடும் கூண்டு ஒன்றை கோழிகள் முதல் முட்டை இடுவதற்கு முன்பே வைக்க வேண்டும்.
-
கோழிகள் முட்டையிடுவதற்கு மூன்று விதமான முட்டையிடும் பெட்டிகள் உள்ளன. 1. தனி முட்டையிடும் பெட்டி- இது 4-5 கோழிகளுக்கு போதுமானது 2.சமுதாய முட்டையிடும் பெட்டி – இது 50-60 கோழிகளுக்குப் போதுமானது 3. டிராப் முட்டையிடும் பெட்டி – இதில் ஒரு சமயத்தில் ஒரு கோழி மட்டுமே முட்டையிடும். இது இனப்பெருக்க மற்றும் கற்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
-
முட்டையிடும் பெட்டியில் ஆழ்கூளத்தினைப் போடவேண்டும். இந்த ஆழ்கூளத்தை வாரம் ஒரு முறை மாற்றி விட வேண்டும். இவ்வாறு மாற்றுவதால் முட்டைகள் அசுத்தமடைவது தடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் முட்டையிடும் பெட்டியினை மூடி விட வேண்டும். இவ்வாறு மூடுவதால் கோழிகள் முட்டையிடும் பெட்டிக்குள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கொள்வது தடுக்கப்படுகிறது.
-
ஆழ்கூள முறை வளர்ப்பில், ஒவ்வொரு நாளும் முட்டைகளை எடுத்த பிறகு, ஆழ்கூளத்தை நன்றாகக் கிளறி விட வேண்டும். மாதம் ஒரு முறை ஆழ்கூளத்தை இரசாயனங்கள் தெளிக்க வேண்டும் அல்லது ஈரமான ஆழ்கூளத்தின் போது அமோனியா வாயு உற்பத்தியைத் தடுக்கவும் இரசாயனங்களைத் தெளிக்கலாம்.
-
முட்டையிடும் காலத்தில் 16 மணி நேரம் வெளிச்சம் கோழிகளுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
கோழிகளுக்கு சரி விகித தீவனம் அளிக்க வேண்டும். கோழிகளின் வயது, உற்பத்தித்திறன், தட்ப வெப்ப நிலை போன்றவற்றிற்கு ஏற்றவாறு அவற்றிற்கு தீவனமளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முட்டையிடும் காலத்தில் சராசரியாக ஒரு கோழிக்கு 100-110 கிராம் தீவனமளிக்க வேண்டும்.
-
குளிர்காலத்தில் கோழிகளின் தீவனம் எடுக்கும் அளவு அதிகரித்தும், வெயில் காலத்தில் தீவனம் எடுக்கும் அளவு குறைந்தும் காணப்படும். குளிர்கால மற்றும் வெயில் கால மேலாண்மை முறைகளை முறையாகப் பின்பற்றி கோழிகளின் முட்டை உற்பத்தி நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
ஒவ்வொரு 6-8 வார இடைவெளியில் கோழிகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளைக் கோழிகளின் குடற்புழுத் தாக்கத்திற்கேற்றவாறு அளிக்க வேண்டும். குறிப்பாக ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்வதை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.
-
ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 5 முறையும், கூண்டு முறையில் வளர்க்கும் போது ஒரு நாளைக்கு 2 முறையும் முட்டைகளை சேகரிக்க வேண்டும்.
-
முட்டையிடாத கோழிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதித்து பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
-
அடைகாக்கும் கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். மேலும் அடைக்காக்கும் பழக்கத்தைக் கீழ்க்கண்ட செயல் முறைகளால் நீக்கி விடலாம்.
- அதிக அளவு புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்த தீவனத்தைக் கோழிகளுக்கு அளித்தல்
- இரவு முழுவதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்
- கூண்டுகளில் கோழிகளைப் போடுதல்
- அயற்சிக்குக் கோழிகளை உட்படுத்துதல்
- கல்லீரல் செயல்படுவதை ஊக்குவிக்க மருந்துகளைக் கொடுத்தல்
கோழிகளின் வகை |
வயது (வாரங்களில்) |
ஆழ்கூளத் தரை (சதுர அடிகளில்) |
கூண்டு முறை (சதுர அடிகளில்) |
முட்டைக்கோழி |
0-8 |
0.60 |
0.20 |
9-18 |
1.25 |
0.30 |
>18 |
1.50 |
0.50 |
இறைச்சிக் கோழி |
0-4 |
0.30 |
- |
4-8 |
0.75 |
- |
முட்டைக் கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை மற்றும் இதர நல மேலாண்மை முறைகள்
வயது |
தடுப்பூசி |
அளிக்கும் முறை |
முதல் நாள் |
மேரக்ஸ் நோய் |
தோலுக்கடியில் |
5ம் நாள் |
இராணிக்கெட் நோய் |
கண் அல்லது மூக்கு வழியாக |
7ம் நாள் |
மேரக்ஸ் நோய்க்கான பூஸ்டர் தடுப்பூசி |
தோலுக்கடியில் |
10ம் நாள் |
அலகு வெட்டுதல் |
- |
12-14ம் நாள் |
மேரக்ஸ் நோய் - இன்டர்மீடியேட் |
கண் வழியாக |
20-22ம் நாள் |
ஐபிடி பிளஸ் |
கண் அல்லது தண்ணீர் மூலம் |
27ம் நாள் |
லசோட்டா |
தண்ணீர் மூலம் |
30ம் நாள் |
இன்ஃபெக்சியஸ் பிராங்கைட்டிஸ் நோய் |
தண்ணீர் வழியாக |
42ம் நாள் |
கோழி அம்மை |
இறக்கையில் |
47ம் நாள் |
குடற்புழு நீக்கம் |
தண்ணீரில் |
52ம் நாள் |
லசோட்டா |
தண்ணீரில் |
64ம் நாள் |
ஆர் 2 பி |
சதை வழியாக |
86ம் நாள் |
கொரைசா அல்லது கோழி காலரா |
தோலுக்கடியில் |
93ம் நாள் |
ஐபி |
தண்ணீரில் |
100ம் நாள் |
மூக்கு அல்லது அலகு வெட்டுதல் (இரண்டாம் முறை) |
- |
110ம் நாள் |
குடற்புழு நீக்கம் |
தண்ணீரில் |
112ம் நாள் |
லசோட்டா |
தண்ணீரில் |
126ம் நாள் |
ஆர்டி – செயலிழக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட |
தோலுக்கடியில் |
280ம் நாள் |
குடற்புழு நீக்கம்/ லசோட்டா |
தண்ணீரில் |
டேக்ஸ்:
கோழி அம்மை தடுப்பூசி போட்டு ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போட்ட இடம் சிவந்து காணப்படும். இதற்கு டேக்ஸ் என்று பெயர்.
மேலே செல்க